நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கச்சத்தீவு பற்றி பேச பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் ஜெயபிரகாஷுக்கு ஆதரவு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

News image
Updated On :2 ஏப்ரல் 2024, 3:35 pm

DIN

கச்சத்தீவு பற்றி பேச அண்ணாமலைக்கோ, பாஜகவுக்கோ தகுதியில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் ஜெயபிரகாஷுக்கு ஆதரவு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்த கட்சி அதிமுகதான்.

தேர்தல் நேரத்தில் அரசியல் ஆதாயத்துக்காக இப்போது கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.

தமிழக மீனவர்களை சிறைபிடித்தபோது அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கச்சத்தீவு பற்றி பேச அண்ணாமலைக்கோ, பாஜகவுக்கோ என்ன தகுதி இருக்கிறது.

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. நெல், கரும்புக்கான ஆதார விலையை திமுக அரசு தரவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.