டாஸ்மாக்கை மூடி விட்டு கள்ளுக்கடையை திறப்போம்: அண்ணாமலை

டாஸ்மாக் கடையை மூடி விட்டு கள்ளுக்கடையை திறப்போம் என்று பிரசாரத்தில் மாநில பாஜகத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
டாஸ்மாக்கை மூடி விட்டு கள்ளுக்கடையை திறப்போம்: அண்ணாமலை

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, ஆனைகட்டி பகுதியில் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை, பிரதமருக்கு பிடித்த பழங்குடி மக்கள் இருக்கும் ஆனைகட்டியில் இருக்கிறோம்.

மலைப் பகுதிகளுக்கு சிறப்புத் திட்டங்களை மோடி மட்டும் தான் செயல்படுத்தியுள்ளார். இங்கு பள்ளிகள் அதிகப்படுத்தப்பட வேண்டும். பிரதமர் வீடுகள், பைப் குடிநீர், எரிவாயு சிலிண்டர் ஆகிய்வை மலை வாழ் மக்களுக்கும் வந்து சேர வேண்டும்.

செங்கல் சூலை விவகாரதில் திமுக, குழந்தையும் கிள்ளி விட்டு தொட்டிலும் ஆட்டி விடுகிறது. இவர்களே பிரச்னையை ஆரம்பித்து, வேறு ஒருவர் மீது பழி போடுகிறார்கள்.

டாஸ்மாக்கை மூடி விட்டு கள்ளுக்கடையை திறப்போம்: அண்ணாமலை
ஓவைசியை எதிர்த்து சானியா மிர்சாவை களமிறக்கும் காங்கிரஸ்?

மக்கள் வாழ்வாதாரமும் பாதிக்காமல் இயற்கையோடு ஒன்றி இருக்கும் ஆனைகட்டி போன்ற பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும். இங்குள்ள மரங்கள் எல்லாம் ஒரு வைரத்துக்கு சமம். அதே சமயம் வளர்ச்சியும் இருக்க வேண்டும்.

இந்தியாவின் ஆதி குடி பழங்குடி தான். பிரதமர் மோடி தான் பழங்குடியைச் சேர்ந்த பெண்ணை குடியரசு தலைவர் ஆக்கினர். மலை வாழ், பழங்குடி மக்களுக்கு பாதுகாவலன் மோடி தான்.

குடிப்பவர்களை குடிக்க வேண்டாம் என நம் கூற முடியாது. ஜனநாயக நாட்டில் குடிக்க உரிமை இல்லையா என்பார்கள். டாஸ்மாக்கில் இருப்பவை எரிசாராயம், அவற்றை மூடிவிட்டு கள்ளுக்கடையை திறப்போம் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com