திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!

தேரடி வீதியில் நடந்து சென்று திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்
திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்

திருவண்ணாமலை தேரடி வீதியில் நடந்து சென்று திமுக வேட்பாளர் அண்ணாதுரைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

திமுக, அதிமுக மற்றும் பாஜக தலைவர்களும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அவர்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை தேரடி வீதியில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் நடந்து சென்று திமுக வேட்பாளர் அண்ணாதுரைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

தேரடி வீதியில் உள்ள கடை வியாபாரிகள், மக்களிடம் திமுகவுக்கு ஆதரவு கோரி துண்டுப் பிரசுரம் வழங்கினார்.

தொடர்ந்து திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி, சோ.காட்டுக்குளம் பகுதியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் திமுக தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ’இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் பேசவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com