தெருவோரக் கடையில் கூழ் குடித்து, யுபிஐ மூலம் ரூ.500 கொடுத்த தமிழிசை!

தெருவோரக் கடையில் கூழ் குடித்து அதற்காக யுபிஐ மூலம் ரூ.500 கொடுத்தார் தமிழிசை.
தெருவோரக் கடையில் கூழ் குடித்து, யுபிஐ மூலம் ரூ.500 கொடுத்த தமிழிசை!

தெலங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

இவர் தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இன்றைய பிரசாரத்தின்போது நடந்த நிகழ்வுகளை தமிழிசை தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார். அதில், இன்று (03/04/2024) தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரத்தின் போது தெருவோரம் கூழ் விற்கும் சகோதரியின் கடைக்குச் சென்று கூழ் அருந்திவிட்டு டிஜிட்டல் பேமென்ட் செய்தேன்.

தெருவோரக் கடையில் கூழ் குடித்து, யுபிஐ மூலம் ரூ.500 கொடுத்த தமிழிசை!
கர்நாடகத்தில் பாஜக சொல்வதும், காங்கிரஸ் செய்ததும்!

பின்பு, என் அன்பை வெளிப்படுத்தும் விதமாக என்னுடைய சகோதரிக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்வித்தேன் என்று புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

தெருவோரக் கடையில் கூழ் குடித்த தமிழிசை, இரண்டு கூழுக்கு யுபிஐ மூலம் ரூ.500 செலுத்தி, அதனை அப்பெண்மணிக்கும் சொல்லி மகிழ்ந்தார். இதற்கு, அங்கு திரண்டிருந்த பாஜக நிர்வாகிகளும் தொண்டர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com