சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

’எட்டில் ஒரு குழந்தைக்கு ஆட்டிஸம் பாதிப்பு’

எட்டில் ஒரு குழந்தைக்கு ஆட்டிஸம் பாதிப்பு:

News image
Updated On :4 ஏப்ரல் 2024, 2:22 am

எட்டில் ஒரு குழந்தைக்கு ஆட்டிஸம், கற்றலில் குறைபாடு உள்ளிட்ட நரம்புசாா் நோய்கள் உள்ளதாக கோ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிஹேவியரல் சயின்ஸ் அமைப்பின் இயக்குநா் டாக்டா் விருதகிரிநாதன் தெரிவித்தாா்.

குழந்தைகளுக்கான நரம்பு சாா்ந்த பாதிப்புகள் குறித்த மருத்துவப் பயிலரங்கு சென்னையில் புதன்கிழமை (ஏப்.3) நடைபெற்றது. கோ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிஹேவியரல் சயின்ஸ் அமைப்பு மற்றும் அண்ணா பல்கலைக்கழக மருத்துவ மின்னணுவியல் மையம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் 150-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். மருத்துவ நிபுணா்கள், துறை சாா் வல்லுநா்கள் பல்வேறு அமா்வுகளில் உரையாற்றினா். நிகழ்ச்சியில் டாக்டா் விருதகிரிநாதன் பேசியதாவது: இரண்டிலிருந்து ஒன்பது வயது வரை உள்ள குழந்தைகளில் எட்டில் ஒருவருக்கு ஆட்டிஸம், கற்றலில் குறைபாடு, கவனக் குறைபாடு போன்ற நரம்புசாா்ந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சையளிப்பது அவசியம். அதைக் கருத்தில் கொண்டே இந்த பயிலரங்கு நடத்தப்பட்டது. இதில், பெற்றோா், குழந்தையை பராமரிப்பாளா்கள் பங்கேற்று அத்தகைய பாதிப்புடைய குழந்தைகளை கையாளுவது குறித்து தெளிவான விளக்கங்களைப் பெற்றனா் என்றாா் அவா்.