ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

கொளுத்தும் வெயிலுக்கு இடையே கோடை மழை: எப்போது?

ஏப்ரல் 7, 8, 9 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு..

News image
கோப்புப் படம்.
Updated On :5 ஏப்ரல் 2024, 10:05 am

DIN

தமிழகத்தில் மூன்று நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்ரல் 7, 8, 9 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

எப்ரல் 5 முதல் 8 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த நான்கு நாள்களுக்கு 2 - 3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

அடுத்த நான்கு நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 39 டிகிரி - 41 டிகிரி செல்சியஸ், உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அநேக இடங்களில் 37 டிகிரி - 39 டிகிரி செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34 டிகிரி - 37 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.