தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை பதிவானது இங்குதான்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகமாக மழை பதிவாகியுள்ளது.


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகமாக மழை பதிவாகியுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அதேபோல், சிவலோகம் மற்றும் திற்பரப்பில் தலா 3 செ.மீ., சுருளோடு, பேச்சிப்பாறையில் தலா 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

பெருஞ்சாணி அணை, மாம்பழத்துறையாறு, சோலயாறு, புத்தன் அணை, தக்கலை உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒரு செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகள், ஆறுகாணி, பத்துகாணி, ஆலஞ்சோலை, கடையாலுமூடு, களியல், திற்பரப்பு, குலசேகரம், திருவட்டாறு, பொன்மனை, திருநந்திக்கரை, திருவரம்பு, அருமனை உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதனால், அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...