ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மடிக்கணினி: இபிஎஸ்

தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக தேனியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

News image
Updated On :9 ஏப்ரல் 2024, 2:59 pm

DIN

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மடிக்கணினித் திட்டம் செயல்படுத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக தேனியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட மடிக்கணினி திட்டம் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்பு தொடரும். மாணவ, மாணவியருக்கு 52 லட்சம் மடிக்கணினிகள் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டன.

பாஜக குறித்து டிடிவி தினகரன் பேசிய காட்சிகளை திரையிட்டு காட்டி, பச்சோந்தி வேட்பாளர் டிடிவி தினகரன். அவரை புறக்கணிக்க வேண்டும்.

விவசாயிகளையும் விவசாயத்தையும் அரவணைத்து சென்றது அதிமுக அரசுதான்.

கடவுளைப் போல் வணங்கப்படும் பென்னி குயிக்கிற்கு மணிமண்டபம் கட்டியவர் ஜெயலலிதா.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக அரசு சட்டப்போராட்டம் நடத்தி அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தது

திமுக ஆட்சியில் அரிசி விலை உயர்ந்துவிட்டது என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.