அமித் ஷாவின் தென்காசி பேரணியும் ரத்து!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தென்காசி சாலைப் பேரணியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உள் துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப் படம்)
உள் துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப் படம்)

மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக உள்துறை துறை அமைச்சர் அமித் ஷா வரும் ஏப். 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழகம் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அமைச்சர் அமித் ஷா ஏப். 12, 13 ஆம் தேதி காரைக்குடி, தென்காசி மற்றும் மதுரையில் வாகனப் பேரணி மூலம் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து, ராஜராஜேஸ்வரி கோயில், பைரம் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களில் தரிசனம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக கூட்டணிக் கட்சி வேட்பாளர் டி. தேவநாதனை ஆதரித்து அமித் ஷா பிரசாரம் செய்யவிருந்த காரைக்குடி வாகனப் பேரணி முன்னதாக ரத்து செய்யப்பட்டது.

மேலும், அமைச்சர் அமித் ஷாவின் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உள் துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப் படம்)
பண மோசடி வழக்கில் மரண தண்டனை: நீதிமன்றத்தின் அதிரடி முடிவு!

இந்த நிலையில், தென்காசியில் அமித் ஷா பிரசாரம் செய்யவிருந்த வாகனப் பேரணியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

முன்னதாக, அமைச்சர் அமித் ஷா ஏப். 4, 5 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தெரிவித்திருந்த நிலையில், அவரின் வருகை சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com