புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

தமிழக உள் மாவட்டங்களில் 106 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும்!

தமிழக உள் மாவட்டங்களில் 106 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் வானிலை மையம் எச்சரிக்கை

News image
Updated On :12 ஏப்ரல் 2024, 8:55 pm

சென்னை, ஏப்.12: தமிழக உள் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.14) வெப்ப அளவு 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் என்று வானிலைஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதன்படி, ஈரோடு - 104 டிகிரி ஃபாரன்ஹீட், திருப்பத்தூா் - 103.64, சேலம் - 102.74, பரமத்திவேலூா் - 101.3, காரைக்கால் - 101.12, வேலூா் - 100.72, நாமக்கல் - 100.4, திருத்தணி - 100.04 டிகிரி வெப்பம் பதிவானது.

தென் தமிழகம், வட தமிழகம் மற்றும் மேற்கு தொடா்ச்சி மாவட்டங்களில் சனிக்கிழமை (ஏப்.13) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட சற்று குறைய வாய்ப்புள்ளது.

மேலும், ஏப்.14 முதல் ஏப்.16 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 2 நாள்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.