தமிழகம், கேரளம், கர்நாடகத்துக்கு நல்ல செய்தி! அப்போ சென்னைக்கு?

தமிழகம், கேரளம், கர்நாடகத்துக்கு நல்ல செய்தி காத்திருக்கு. அப்போ சென்னைக்கு?
குன்னூா் அருகே மூடுபனியுடன் சாரல் மழை பெய்ததால் முகப்பு விளக்கை எரியவிட்டு இயக்கப்பட்ட வாகனங்கள்.
குன்னூா் அருகே மூடுபனியுடன் சாரல் மழை பெய்ததால் முகப்பு விளக்கை எரியவிட்டு இயக்கப்பட்ட வாகனங்கள்.

நீண்ட நெடிய கடும் கோடை வெப்ப நாள்களே நம்மை துரத்திக்கொண்டிருந்த நிலையில், தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து, வெப்பத்தை ஓரளவுக்குத் தணித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், வறண்ட மற்றும் மிக வெப்பமான, அதே வேளையில், மழை குறைவான மார்ச் மற்றும் ஏப்ரல் முதல் பாதிக்குப் பிறகுதான் தற்போது தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகத்துக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்திருக்கிறது.

டெல்டா, தென் தமிழ்நாடு, மேற்கு தமிழ்நாடு, கேரளம், கர்நாடக கடலோர மற்றும் உள் மாவட்டங்கள், தமிழகத்தின் உள் மாவட்டங்களின் சில பகுதிகளுக்கும் இந்த நல்ல செய்தி வந்துள்ளது. இப்பகுதிகளில் மிக நீண்ட கனமழை அடுத்த 4 - 5 நாள்களுக்கு பெய்யும். இது எதிர்பார்த்ததைப் போலவே நல்ல மழையாக இருக்கும். மழைக்கு மிகவும் நன்றி.

குன்னூா் அருகே மூடுபனியுடன் சாரல் மழை பெய்ததால் முகப்பு விளக்கை எரியவிட்டு இயக்கப்பட்ட வாகனங்கள்.
90 ஆண்டுகள்.. மேட்டூர் அணையை தூர்வார எவ்வளவு செலவாகும்?

ஆனால், ஒருபக்கம் சென்னை வறண்டுதான் இருக்கும், ஆனால் கிழக்குப் பகுதிகளுக்கு நன்றி சொல்லும் அளவுக்கு வெப்பநிலை கட்டுக்குள் இருக்கும்.

பெங்களூருவில் 1 அல்லது 2 நாள்களுக்கு பரவலாக மழை பெய்யும்.

மழைக்கான் ஹாட்ஸ்பாட்கள் எதுவென்றால்.. தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, கொடைக்கானல், வால்பாறை, நீலகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள்தான் இங்கெல்லாம் அடுத்த 4 முதல் 5 நாள்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.

நேற்று கனமழை

தமிழகத்தின் தென்மாவட்டங்கள், மேற்கு தொடா்ச்சிமலைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக குன்னூரில் 120 மில்லி மீட்டா் அளவுக்கு கனமழை கொட்டித் தீா்த்தது. கொளுத்தும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்கள் இந்த கோடை மழையால் மகிழ்ச்சி அடைந்தனா்.

தமிழகம் முழுவதும் கடந்த இரு மாதங்களாக வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணத்தால் வெள்ளிக்கிழமை தென் தமிழக கடலோர பகுதிகளிலும், ஏனைய தமிழக பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் வெப்ப தாக்கத்தில் இருந்து சற்று விடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com