தமிழகத்தை தாக்கவுள்ள வெப்ப அலை: வெதர்மேன் எச்சரிக்கை

‘சென்னையை பொறுத்தவரை இந்த வார இறுதியில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்’
தமிழகத்தை தாக்கவுள்ள வெப்ப அலை: வெதர்மேன் எச்சரிக்கை

தமிழகத்தில் வெப்ப அலை வீசவுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் எனப்படும் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் சுட்டெரித்துக் கொண்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, ஈரோட்டில் 102.92 டிகிரி (ஃபாரன்ஹீட்), சேலம், திருப்பத்தூா் (தலா) - 101.48, வேலூா் - 100.94, பரமத்திவேலூா் - 100.76, தருமபுரி, நாமக்கல் (தலா) - 100.4 டிகிரி வெப்பம் பதிவானது.

இந்த நிலையில், இந்த வாரம் முதல் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தை தாக்கவுள்ள வெப்ப அலை: வெதர்மேன் எச்சரிக்கை
பாஜக தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு எந்த திட்டமும் இல்லை: ராகுல் காந்தி

இதுகுறித்து முகநூல் பக்கத்தில் பிரதீப் ஜான் வெளியிட்ட பதிவு:

“தமிழகத்தில் வியாழக்கிழமை முதல் வெப்ப அலை வீசக்கூடும். சென்னையை பொறுத்தவரை இந்த வார இறுதியில் 40 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகும்.

டெல்டா மற்றும் வடதமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கவுள்ளது. தமிழக உள்மாவட்டங்களில் 42 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாக வாய்ப்புள்ளது.

ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் சுற்றுப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து 40 டிகிரி செல்சியஸை தொடும்.

தேர்தல் வாக்குப்பதிவு சமயத்தில் சென்னையில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகும். சென்னையின் உள்புற பகுதிகளில் 36 செல்சியஸ் வரையும், கடலோரப் பகுதிகளில் 35 செல்சியஸ் வரையும் வெயில் சுட்டெரிக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தென் தமிழகத்தின் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com