நாட்டில் 5% பேர் மட்டுமே ஏழ்மை நிலையில் உள்ளதாக பாஜக கூறுவதை ஏற்க முடியாது: ப.சிதம்பரம்

நாட்டில் 5% பேர் மட்டுமே ஏழ்மை நிலையில் உள்ளதாக பாஜக கூறுவதை ஏற்க முடியாது: ப.சிதம்பரம்

நாட்டில் 5 சதவீதம் பேர் மட்டுமே ஏழ்மை நிலையில் உள்ளதாக பாஜக கூறுவதை ஏற்க முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பாஜக தேர்தல் அறிக்கை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. மக்களை ஏமாற்றும் வகையில் பல அறிவிப்புகளை பாஜக வெளியிட்டுளள்து. இந்தியாவில் ஏறத்தாழ ஏழ்மை அகன்றுவிட்டது என நிதி அயோக் கூறுகிறது. 5 கோடி மக்கள் மட்டுமே வறுமையில் இருப்பதாக நிதி அயோக் கூடும் நிலையம், 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் ஏன்?. ஆனால் இந்தியாவில் இன்னும் ஏழ்மை இருக்கிறது.

அதேசமயம் 5 கோடி குடும்பம்தான் ஏழ்மையில் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜாதிவாரி பொருளதார கணக்கெடுப்பு நடத்தினால் தான் ஏழ்மை குறித்த சரியான நிலவரம் தெரியவரும். குழாய் மூலமாக தண்ணீரே வராத நிலையில் எப்படி எரிவாயு வரும். இது மிகப்பெரிய வேடிக்கையாகும். எரிவாயு விலை அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் வாங்க தயங்குகிறார்கள. உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பயன்பாடு 3.7 என்ற எண்ணிக்கையில் தான் உள்ளது. 4 கோடி வீடுகள் கட்டியிருந்தால் ஒரு மாவட்டத்திற்கு 52 ஆயிரம் இருக்க வேண்டும்.

இந்தியாவில் 766 மாவட்டங்கள் இருக்கிறது. அதில் சிவகங்கையும் ஒன்று. சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52000 வீடுகளைக் காட்ட முடியுமா?. கணக்கில் எழுதுகிறார்கள் ஆனால் வீடுகள் கட்டப்படுவதில்லை. அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற பாஜக வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பாஜக அரசு, போதிய விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?. 9 ஆண்டுகளில் பெருமுதலாளிகளின்ரூ.

11 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பெருமுதலாளிகளின் பல லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யும் பா.ஜ.க. அரசு, மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பாஜக ஒத்திப் போட்டுள்ளது. 33% மகளிர் இட ஒதுக்கீடு குறித்து பாஜக அரசு சட்டம் இயற்றி இருந்தாலும், அது இப்போதைக்கு அமலுக்கு வராது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com