தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆவின் பால் பாக்கெட்டுகளில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து வெளியிடாதது ஏன்?

ஆவின் பால் பாக்கெட்டுகளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து வெளியிடாதது குறித்து விளக்கம்

News image
ஆவின் பால்
Updated On :15 ஏப்ரல் 2024, 7:17 am

DIN

ஆவின் பால் பாக்கெட்டுகளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி அச்சிட்டு வெளியிடப்படுவதில்லை என வெளியான செய்திக்கு ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் முக்கிய பண்டிகைகளை முன்னிட்டு, மக்களுக்கு ஆவின் நிர்வாகம் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தியை அச்சிட்டு வழங்கி வரும் நடைமுறை சில ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

ஆனால், தமிழ்ப் புத்தாண்டு தினத்துக்கு வாழ்த்துச் செய்தி அச்சிடப்படவில்லை என்பது நேற்று பேசுபொருளானது. இந்த நிலையில்தான் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் விளக்கத்தில்,

ஆவின் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்திகளை அச்சிட்டு விநியோகித்து வருகிறது.

இந்த முறையானது பல்வேறு ஆண்டுகளாக தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.

இவ்விழாக்கள் அனைத்தும் பல ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளவையாகும். தமிழ் புத்தாண்டுக்கான வாழ்த்துச் செய்தி இதுவரை ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டதில்லை. எனவே இந்த வருடமும் அச்சிடப்படவில்லை என்பதை ஆவின் நிறுவனம் தெரிவித்துக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.