‘வில்லேஜ் குக்கிங்’ தாத்தாவின் மருத்துவத்துக்கு உதவ ராகுல் மறுப்பா?

பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சி தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம் என யூடியூப் நிர்வாகி தெரிவித்துள்ளார்.
‘வில்லேஜ் குக்கிங்’ தாத்தாவின் மருத்துவத்துக்கு உதவ ராகுல் மறுப்பா?

வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலில் வரும் பெரிய தம்பி தாத்தாவின் மருத்துவ செலவுக்கு ராகுல் காந்தியிடம் பணம் கேட்டதாகவும், அவர் உதவ மறுத்துவிட்டதாகவும் பாஜக பிரமுகர் வெளியிட்ட செய்திக்கு சேனலின் நிர்வாகி சுப்ரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரபல குக்கிங் யூடியூப் சேனலான வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு 2.5 கோடிக்கும் மேல் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் இயங்கி வரும் இந்த யூடியூப் சேனலை சுப்ரமணியன், அய்யனார், முருகேசன், தமிழ்ச்செல்வன், முத்து மாணிக்கம் ஆகியோருடன் பெரியதம்பியும் நடத்தி வருகிறார்.

இவர்கள் கிராமத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இவர்களுடன் இணைந்து சமைத்த விடியோ இணையத்தில் வைரலாகியது. இதன்மூலம், இந்தியா முழுவதும் இவர்களுக்கான சப்ஸ்கிரைபர்கள் விரிவடைந்தனர்.

ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நடைபயணத்திலும் வில்லேஜ் குக்கிங் சேனலின் பெரியதம்பி தாத்தா உள்ளிட்டோர் தமிழகத்தில் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிலையில், பெரிய தம்பி தாத்தா இதய நோய் காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது குணமடைந்து வருகிறார்.

‘வில்லேஜ் குக்கிங்’ தாத்தாவின் மருத்துவத்துக்கு உதவ ராகுல் மறுப்பா?
இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

இதற்கிடையே பெரியதம்பி தாத்தாவின் மருத்துவ செலவுக்கு ராகுல் காந்தியிடம் யூடியூப் சேனலில் இருந்து உதவி கேட்டதாகவும், அவர் மறுத்துவிட்டதாகவும் பாஜக ஆதரவாளர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், அவதூறை மறுத்து யூடியூப் சேனலின் நிர்வாகி சுப்ரமணியன் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், ”இது முற்றிலும் பொய். எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சி தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

இவரின் கண்டனத்தை தொடர்ந்து, பாஜக ஆதரவாளர் தனது பதிவை நீக்கம் செய்தது மேலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com