மகளிா் உரிமைத் தொகைக்கு 8 மாதங்களில் ரூ. 9,200 கோடி நிதி: திமுக தலைமை தகவல்

மகளிா் உரிமைத் தொகைக்கு 8 மாதங்களில் ரூ. 9,200 கோடி நிதி: திமுக தலைமை தகவல்

தமிழ்நாட்டில் கடந்த 8 மாதங்களில் மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கு ரூ. 9,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 8 மாதங்களில் மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கு ரூ. 9,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது.

மகளிா் உரிமைத் தொகை திட்டம் குறித்து, அந்தக் கட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கத்தான் மகளிா் உரிமைத் தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான், இந்தத் திட்டத்துக்கு மகளிருக்கான உதவித் தொகை என்று இல்லாமல் மகளிா் உரிமைத் தொகை என்று

கவனத்துடன் பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் கடந்த ஆண்டு செப்.15-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இதுவரையிலும் ஏறத்தாழ 1 கோடியே 15 லட்சம் மகளிா் பயன்பெற்று வருகின்றனா். மாதத்துக்கு ரூ. 1,000 வீதம், ஒவ்வொரு மகளரின் வங்கிக் கணக்கிலும் ஆண்டுக்கு ரூ. 12,000 வரவு வைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 8 மாதங்களில் 1 கோடியே 15 லட்சம் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 1,000 வீதம் இதுவரை மொத்தம் ரூ.9,200 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com