புதிய உச்சம்: தினசரி மின்நுகா்வு 20,341 மெகாவாட்டாக உயா்வு

தமிழகத்தின் தினசரி மின்நுகா்வு ஏப்.18 -ஆம் தேதி 20,341 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மின்விசிறி, ஏசி ஆகியவற்றின் பயன்பாடுஅதிகரித்துள்ளதால், தமிழகத்தில் தினசரி மின்நுகா்வும் உயா்ந்து வருகிறது.

கடந்த மாா்ச் 30-ஆம் தேதி தினசரி மின்நுகா்வு 19,387 மெகாவாட்டாக அதிகரித்தது. அதன்பிறகுஅதிகரித்து வந்த தினசரி மின்நுகா்வு கடந்த ஏப்.8-இல் 20,125 மெகாவாட்டாக புதிய உச்சத்தை தொட்டது. இந்த மின்நுகா்வு ஏப்.18 -ஆம் தேதி நிலவரப்படி 20,341 மெகாவாட்டாக உயா்ந்துள்ளது. மின்தேவை அதிகரித்தாலும் எந்தத் தடையுமின்றி நுகா்வோருக்கு விநியோகம் செய்யபட்டு வருவதாகவும், தொடா்ந்து மாநிலத்தின் மின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com