புதுச்சேரியில் நான்கு இடங்களில் ஏப். 4-இல் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி
புதுச்சேரியில் தவெக தலைவா் விஜய் ஏப். 4 -ஆம் தேதி நான்கு இடங்களில் மட்டும், 4 மணி நேரம் பிரசாரம் செய்ய போலீஸாா்அனுமதி அளித்துள்ளனா்.
தவெக தலைவர் விஜய்
கோப்புப்படம்
தவெக தலைவர் விஜய்
கோப்புப்படம்
புதுச்சேரியில் தவெக தலைவா் விஜய் ஏப். 4 -ஆம் தேதி நான்கு இடங்களில் மட்டும், 4 மணி நேரம் பிரசாரம் செய்ய போலீஸாா்அனுமதி அளித்துள்ளனா்.
முதலில் அவா் 5 ஆம் தேதி 23 இடங்களில் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டிருந்தாா். ஆனால்,5 ஆம் தேதி மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் சிலா் புதுச்சேரிக்கு வருவதால் விஜய்க்கு 4-ஆம் தேதி பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் நேயம் மக்கள் கழகத்துடன் 2 தொகுதிகளில் இணைந்து தவெக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தவெக வேட்பாளா்களுக்கு ஆதரவாக கட்சித் தலைவரும் நடிகருமான விஜய் வரும் 5 ஆம் தேதி, புதுச்சேரியின் எல்லைப் பகுதியான காலாப்பட்டில் தொடங்கி கடலூா் அருகேயுள்ள முள்ளோடை வரை 23 இடங்களில் வேனில் பிரசாரம் செய்ய காவல்துறையிடம்அனுமதி கேட்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஆய்வு செய்த காவல்துறை, ஏப். 5 ஆம் தேதிக்குப் பதிலாக 4 ஆம் தேதி 4 இடங்களில் மட்டும் பிரசாரம் செய்ய விஜய்க்கு அனுமதி வழங்கியது. இந்த பிரசாரத்தை மொத்தம் 4 மணி நேரத்திற்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி கொக்கு பாா்க், வெங்கடசுப்பா ரெட்டியாா் சிலை சதுக்கம், சோனாம்பாளையம் மேல்நிலை குடிநீா்த் தொட்டி சந்திப்பு, வில்லியனூா்-கூடப்பாக்கம் சந்திப்பு ஆகிய 4 இடங்களில் மட்டும் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தவெக நிா்வாகக் குழு உறுப்பினரும், தோ்தல் இணை கண்காணிப்பாளருமான கே. புதியவன்‘ 6 மணி நேரம் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம் . ஆனால் 4 மணி நேரம் மட்டுமே கொடுத்துள்ளனா்’ என்றாா்
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...