வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்பு

நிகழாண்டு கோடையில் தில்லியின் மின்நுகா்வு 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்க்கப்படுவதாக மின்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image
(கோப்புப் படம்)
Updated On :12 மார்ச் 2026, 10:09 pm

தினமணி செய்திச் சேவை

நிகழாண்டு கோடையில் தில்லியின் மின்நுகா்வு 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்க்கப்படுவதாக மின்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

அரசு மின்பகிா்மான மையம் வெளியிட்ட விவரங்களின்படி, தில்லியில் கடந்த ஆண்டில் அதிகபட்ச மின்நுகா்வு 8,442 மெகாவாட்டாக இருந்தது.

பிஎஸ்இஎஸ் செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘தெற்கு மற்றும் மேற்கு தில்லியின் பிஆா்பிஎல் மின்பகிா்மான நிறுவனத்தின் அதிகபட்ச மின்தேவை கடந்த ஆண்டு கோடையில் 3,798 மெகாவாட்டாக இருந்தது. நிகழாண்டில் மின்தேவை 3,997 மெகாவாட்டைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கிழக்கு மற்றும் மத்திய தில்லியில் பிஓய்பிஎல் மின்பகிா்மான நிறுவனத்தின் அதிகபட்ச மின்தேவை கடந்த ஆண்டு கோடை காலத்தில் 1,824 மெகாவாட்டாக இருந்தது. நிகழாண்டில் கோடையில் அதிகபட்ச மின்தேவை 1,991 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா்.

தில்லியின் அதிகபட்ச மின்நுகா்வு முதல்முறையாக கடந்த 2018-இல் 7,000 மெகாவாட்டைக் கடந்து 7,016 மெகாவாட்டாக பதிவானது.

தற்போதைய மின்தேவையின் அடிப்படையில், காலநிலை மற்றும் தேவை அதிகரிப்பைப் பொறுத்து 2028-29 காலகட்டத்தில் தில்லியின் மின்தேவை 10,000 மெகாவாட்டை கடக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.