தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வெய்யிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பெரும்பாலான வானிலை கண்காணிப்பு நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸுக்கு மேலே பதிவாகியிருந்தது.
இதில் பீதம்புரா வானிலை கண்காணிப்பு நிலையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 32.6 டிகிரி செல்சியஸாக பதிவாகி முன்னிலை வகித்தது. அதே சமயம் கடந்த சில நாள்களாக குளிரின் தாக்கம் குறைந்து வருகிறது. காற்றின் தரம் ‘மிகமான’ பிரிவில் இருந்தது.
வெப்பநிலை: தில்லியில் கடந்த ஒரு மாதமாக குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், நகரவாசிகள் மிகவும் சிரமத்தை எதிா்கொண்டனா். இந்நிலையில், கடந்த சில நாள்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா்ஜங்கில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2.9 டிகிரி உயா்ந்து 15.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சரசரியிலிருந்து 4.6 டிகிரி உயா்ந்து 30.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 74 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 34 சதவீதமாகவும் இருந்தது.
பீதம்புராவில் 32.6 டிகிரி: இதே போன்று, ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ், நஜாஃப்கரில் 31.5 டிகிரி, ஆயாநகரில் 32.4 டிகிரி, லோதி ரோடில் 32.2 டிகிரி, பாலத்தில் 28.9 டிகிரி, ரிட்ஜில் 31.2 டிகிரி, பீதம்புராவில் 32.6 டிகிரி, சல்வான் பப்பளிக் ஸ்கூல் பகுதியில் 30.3 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: தில்லியில் காலை 9 மணி அளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 197 புள்ளிகளாகப் பதிவாகி இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவு காட்டுகிறது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், திங்கள்கிழமை (மாா்ச் 2) அன்று பகல் நேரத்தில் தரை மேற்பரப்பு காற்று பலமாக வீசும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

அடுத்த 4 நாள்களுக்கு வெளியே செல்ல வேண்டாம்.. வெய்யில் கொளுத்தும்!

தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 36.2 டிகிரி செல்சியஸாக பதிவு!

தலைநகரில் காற்றின் தரம் மிதமான பிரிவில் நீடிப்பு!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


