தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்: 12 இடங்களில் 100 டிகிரி

தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்: 12 இடங்களில் 100 டிகிரி

Updated On :20 ஏப்ரல் 2024, 10:35 pm

தமிழகத்தில் சனிக்கிழமை 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. ஏப்.21 முதல் ஏப்.24-ஆம் தேதி வரை வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு, மதுரை உள்பட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4.5 டிகிரி வரை அதிகமாக பதிவானது. மாநிலத்தில் மொத்தம் 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கும் அதிகமாக பதிவானது. அதன்படி, பரமத்திவேலூா் - 106.16, திருச்சி - 105.98, மதுரை விமான நிலையம், ஈரோடு (தலா) - 105.08, திருத்தணி - 104.36, வேலூா், சேலம் (தலா) - 104.18, திருப்பத்தூா், மதுரை நகரம் (தலா) - 104, தஞ்சாவூா் - 103.1, தருமபுரி - 102.2, பாளையங்கோட்டை - 101.48.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.21) முதல் ஏப்.24 -ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் வெயில் இயல்பைவிட 3 டிகிரி வரை அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப்.21, 22 ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கோடை மழை: தமிழகத்தையொட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், ஞாயிற்றுக்கிழமை (ஏப்.21) முதல் ஏப்.24 -ஆம் தேதி வரை மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.