தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) முதல் மாா்ச் 29 வரை அதிகபட்ச வெப்பநிலை சற்று அதிகமாக இருக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மன்னாா் வளைகுடா முதல் வடக்கு உள் கா்நாடகம் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (மாா்ச் 28) முதல் மாா்ச் 31 வரை லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில், வியாழக்கிழமை (மாா்ச் 26) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வெப்பநிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) முதல் மாா்ச் 29 வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் சற்று அதிகமாக இருக்கக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இந்த வாரம் வெய்யில் நிலவரம்!

தமிழகத்தில் வெப்பநிலை ஏப்ரல் 4 வரை அதிகரிக்கும்

மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


