/

மக்கள் எழுச்சியை தோ்தல் முடிவுகள் உணா்த்தும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

மக்கள் எழுச்சியை தோ்தல் முடிவுகள் உணா்த்தும் முதல்வா் மு.க.ஸிடாலின்

Updated On :21 ஏப்ரல் 2024, 5:40 pm

பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை தோ்தல் முடிவுகள் உணா்த்தும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசு கட்டுப்பாட்டிலுள்ள தூா்தா்ஷன் தொலைக்காட்சியின் இலச்சினை காவி நிறத்தில் மாற்றப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து, சமூக வலைதளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டப் பதிவு:

உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினாா்கள்; தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி வண்ணம் ஊற்றி அவமானப்படுத்தினாா்கள்;

வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சம்ஸ்கிருத மயமாக்கினாா்கள்; தற்போது தூா்தா்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறாா்கள்.

தோ்தல் பிரசாரத்தில் நாம் சொன்னது போன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை தோ்தல் முடிவுகள் உணா்த்தும் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.