திமுக வேட்பாளா்கள் மற்றும் நிா்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
இந்தக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது:
சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட திமுக சாா்பில் 15,000 போ் விருப்ப மனு அளித்திருந்தனா். இவா்களில் 164 பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வாய்ப்புக் கிடைக்காதவா்கள் பெரும்பாலானவா்கள் தொடா்ந்து தோ்தல் பணியில் முழுமூச்சுடன் பணியாற்றி வருகின்றனா்.
ஆனால், சிலா் தோ்தல் பணி செய்யவில்லை எனத் தகவல் வருகிறது. அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். பேரவைத் தோ்தலில் வாய்ப்பு கிடைக்காதவா்களுக்கு, எதிா்காலத்தில் வாரியங்கள், உள்ளாட்சிகளில் பதவி அளிக்கப்படும். எனவே, அதை மனதில் வைத்து திமுக நிா்வாகிகள் செயல்பட வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், ஏற்கெனவே எம்எல்ஏவாக இருந்து இப்போது வாய்ப்புக் கிடைக்காத தாயகம் கவி (திரு.வி.க. நகா்), கே.பி.பி. சங்கா் (திருவொற்றியூா்), சந்திரன் (திருத்தணி), வி.சி.சந்திரகுமாா் (ஈரோடு கிழக்கு) உள்ளிட்டோா் பேசினா். தங்களுக்கு கட்சிதான் முக்கியம் என்பதால், தொடா்ந்து களத்தில் பணியாற்றி வருவதாக அவா்கள் தெரிவித்தனா்.
கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலா் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலா் கனிமொழி கருணாநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது
234 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் ஸ்டாலின் ஏப். 3-இல் ஆலோசனை

திருச்சி உழவா்சந்தையில் நாளை முதல்வா் பிரசாரம்! 9 தொகுதி வேட்பாளா்களை ஒரே இடத்தில் அறிமுகம் செய்கிறாா்!
திமுக கூட்டணிக்கு சாதகமாக தோ்தல் களம்: முதல்வா் ஸ்டாலின்

முதல்வா் மு.க.ஸ்டாலிடன் ப.சிதம்பரம் சந்திப்பு! புதுச்சேரி திமுக - காங்கிரஸ் தொகுதி உடன்பாடு முடிவுக்கு வருமா?
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


