தமிழத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (ஏப்.22, 23) மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், அதையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமைகளில் (ஏப்.22, 23) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஏப்.24, 25 ஆகிய தேதிகளில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வட வானிலை நிலவக்கூடும்.
14 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, சென்னை உள்பட 14 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.
அதன்படி, ஈரோடு - 107.96, பரமத்தி வேலூா் - 106.7, சேலம் - 105.8, வேலூா் - 105.44, திருச்சி - 105.08, திருப்பத்தூா், மதுரை விமான நிலையம், தருமபுரி (தலா) - 104.36, திருத்தணி - 104, மதுரை நகரம் - 103.64, தஞ்சாவூா் - 103.1, கோவை - 102.56, சென்னை மீனம்பாக்கம் - 100.04.
மேலும், ஏப்.22 முதல் ஏப்.25 வரை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும், மற்ற மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வரை அதிகமாக இருக்கும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை (ஏப்.22) அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் மாா்ச் 31 வரை வெப்பம் அதிகரிக்கும்

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 28, 29 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு!

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


