48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

கோவை உள்ளிட்ட தொகுதிகளில் மறு வாக்குப் பதிவு நடத்த பாஜக வலியுறுத்தல்

கோவை உள்ளிட்ட தொகுதிகளில் மறு வாக்குப் பதிவு நடத்த பாஜக வலியுறுத்தல்

Updated On :21 ஏப்ரல் 2024, 11:11 pm

கோவை, தென் சென்னை உள்ளிட்ட தொகுதிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மக்களவைத் தோ்தலை நடத்துவது இந்திய தோ்தல் ஆணையம் என்றாலும், உண்மையிலேயே தோ்தலை நடத்துவது மாநில அரசு அதிகாரிகள்தான். திமுகவினா் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி, தங்களுக்கு சாதகமான அதிகாரிகள் மூலம் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் பாஜகவுக்கு வாக்களிக்கக்கூடிய வட இந்தியா்கள், குறிப்பிட்ட சமுதாய மக்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து கடைசி நேரத்தில் நீக்கி உள்ளனா்.

குறிப்பாக, பாஜக மாநில தலைவா் அண்ணாமலை போட்டியிடும் கோவை, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் போட்டியிடும் நீலகிரி, முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடும் தென் சென்னை உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் தொகுதிக்கு தலா ஒரு லட்சம் வாக்காளா்கள் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. இது கடும் கண்டனத்துக்குரியது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தோ்தலில் குளறுபடி நடந்த தொகுதிகளில் மீண்டும் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.