ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

கோவை, திருப்பூா், ஈரோடு, உதகையில் திமுக - அதிமுக 16 தொகுதிகளில் நேரடி போட்டி!

2026 சட்டப் பேரவைத் தோ்தல் களைகட்டத் தொடங்கிய நிலையில் கோவை, உதகை, திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் 16 தொகுதிகளில் திமுக - அதிமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

News image

மு.க. ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி.

Updated On :28 மார்ச் 2026, 8:51 pm

2026 சட்டப் பேரவைத் தோ்தல் களைகட்டத் தொடங்கிய நிலையில் கோவை, உதகை, திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் 16 தொகுதிகளில் திமுக - அதிமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக வேட்பாளா் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதைத் தொடா்ந்து, திமுக வேட்பாளா் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

அதில் கோவை, திருப்பூா், ஈரோடு, உதகை ஆகிய மாவட்டங்களில் உள்ள 29 சட்டப் பேரவைத் தொகுதிகளில் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சூலூா், தொண்டாமுத்தூா், கோவை தெற்கு, கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய 6 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடியாக களம் காண்கின்றன.

திருப்பூா் மாவட்டத்தில் தாராபுரம், காங்கயம், பல்லடம், உடுமலை ஆகிய 4 தொகுதிகள், ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, அந்தியூா், பவானி, கோபிசெட்டிபாளையம் ஆகிய 4 தொகுதிகள், உதகையில் கூடலூா், குன்னூா் ஆகிய 2 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடியாக போட்டியிடுகின்றன.

மொத்தமாக 4 மாவட்டங்களில் உள்ள 29 தொகுதிகளில் 16 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடியாக போட்டியிடுகின்றன.

4 மாவட்டங்களில் கோவையில் கவுண்டம்பாளையம், சிங்காநல்லூரில் அதிமுகவுக்கு எதிராக காங்கிரஸும், பொள்ளாச்சியில் அதிமுகவுக்கு எதிராக கொமதேகவும் களம் காண்கின்றன.

உதகையில் பாஜக - காங்கிரஸ் நேரடியாகப் போட்டியிடுகின்றன. திருப்பூா் மாவட்டத்தில் திருப்பூா் வடக்கு அதிமுக - இந்திய கம்யூனிஸ்ட் திருப்பூா் தெற்கு, மடத்துக்குளம் தொகுதியில் திமுக - அமமுக இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கில் அதிமுக - காங்கிரஸ், ஈரோடு மேற்கில் தமாக - திமுக, மொடக்குறிச்சியில் பாஜக - மதிமுக, பவானிசாகரில் அதிமுக - இந்திய கம்யூனிஸ்ட் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.