சென்னை சென்ட்ரலில் பெண்ணின் சடலம்: அடையாளம் காண்பதில் சிக்கல்

சென்னை சென்ட்ரலில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அப்பெண்ணின் அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது.
சென்னை சென்ட்ரலில் பெண்ணின் சடலம்: அடையாளம் காண்பதில் சிக்கல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தின் உள்ளே செவ்வாய்க்கிழமை காலை, பெண் ஒருவரின் சடலம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் அப்பெண் யார் என்று அடையாளம் காண்பதில் காவல்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அலுவலகக் கட்டடத்தில், மர்மமான முறையில் பெண் ஒருவர் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது சடலம் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கில், ரயில்வே இருப்புப் பாதை காவல்துறையினர் மற்றும் ஆர்பிஎஃப் காவல்துறையினர் இணைந்து இறந்து போன பெண்ணின் அடையாளத்தைக் கண்டுபிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை சென்ட்ரலில் பெண்ணின் சடலம்: அடையாளம் காண்பதில் சிக்கல்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் கொலை?

இறந்த நிலை இருந்த பெண்ணின் கையில் செல்போனோ அல்லது வேறு விவரங்களோ எதுவும் இல்லை. இதுகுறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பெண்ணின் இறப்பு விபரங்களை கண்டறிய சவாலாக உள்ளதாகக் காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல லட்சக்கணக்கான ரயில் பயணிகள் தொடர்ச்சியாக வரும் நிலையில் ஆர்பிஎஃப் போலீசார் மற்றும் ரயில்வே இருப்புப் பாதை போலீசார் இணைந்து இறந்து போன பெண் எப்படி ரயில் நிலையத்துக்குள் வந்தார் என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை சென்ட்ரலில் பெண்ணின் சடலம்: அடையாளம் காண்பதில் சிக்கல்
மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

எந்த ஒரு சோதனையும் இல்லாமல் எப்படி உள்ளே நுழைந்து இருக்க முடியும் என்றும் மேலும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட இடத்தில் எந்த ஒரு சிசிடிவி கேமராவும் இல்லாமல் இருப்பதும் கேள்விக் குறியாக உள்ளது.

மேலும் சென்ட்ரல் ரயில் பயணிகள் தங்கும் அறையும் அங்கு இருக்கும் நிலையில், ஒரு ரயில்வே அதிகாரி கூடவா பாதுகாப்புப் பணியில் இல்லாமல் இருந்திருப்பார் என சந்தேகங்கள் ஏற்படுத்தி உள்ளதாகவும் மேலும் இறந்து போன பெண் வடநாட்டைச் சேர்ந்தவரா ?அல்லது தமிழகத்தைச் சேர்ந்தவரா ? மேலும் இப்பெண் வடநாட்டிலிருந்து சென்னைக்கு வந்தவரா ? அல்லது சென்னையிலிருந்து வடநாட்டுக்கு செல்லவிருந்த பயணியா ? என்கிற சந்தேகம் போலீசார் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது

குறிப்பாக இப்பெண் இறப்புக்குக் காரணம் தற்கொலையா அல்லது கொலையா என்கிற கோணத்தில் வெளியே உள்ள சிசிடிவி கேமரா மூலம் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஏதேனும் துப்பு கிடைக்கிறதா என்றும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

மேலும் யாரேனும் அப்பெண்ணை அழைத்து வந்து கொலை செய்து செல்போன் மற்றும் முகவரி விவரங்கள் அனைத்தையும் கொலையாளி எடுத்து சென்றுள்ளாரா? என்கிற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com