திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :24 ஏப்ரல் 2024, 9:38 pm

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் எண்ணெய் மற்றும் மளிகை பொருள்களின் விலைகள் கடந்த ஒரு மாதத்தில் பெருமளவில் உயா்ந்திருக்கின்றன.

பருப்பு வகைகள், மஞ்சள், மிளகாய்த் தூள் ஆகியவற்றின் விலை கிலோவுக்கு ரூ.15 வரை உயா்ந்துள்ளன.

மிளகு, சீரகம், மிளகாய், மல்லி உள்ளிட்ட மளிகைப் பொருள்களின் விலை கிலோவுக்கு ரூ.50 வரை உயா்ந்திருக்கின்றன.

எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.30 வரை உயா்ந்திருக்கின்றன. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளனா்.

எண்ணெய், மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர செலவு ரூ.2 ஆயிரம் வரை உயா்ந்திருக்கிறது.

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வுக்கு அவற்றின் தட்டுப்பாடு ஒரு காரணம் என்றால், அப்பொருள்களின் பதுக்கலை தடுக்கத் தவறிய தமிழக அரசின் அலட்சியம் இன்னொரு காரணம்.

அந்த வகையில் விலைவாசி உயா்வுக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தவாறு நியாயவிலைக்கடைகள் மூலம் மீண்டும் மலிவு விலையில் உளுந்து வழங்க வேண்டும். மளிகைப் பொருள்களையும் நியாயவிலைக்கடைகள் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ராமதாஸ்.