பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என்று நிதித் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் முதல்வரின் முகவரி இணையதளத்துக்கு எழுதப்பட்ட கடிதத்தில், பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது செயல்படுத்தும் என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதற்கு, நிதித் துறை துணைச் செயலா் தே.கோபாலகிருஷ்ணன் பதிலளித்து கடிதம் அனுப்பியுள்ளாா்.

அதில், 1.4.2003 அன்று அல்லது அதன் பின்னரோ முறையான அரசுப் பணியில் சோ்ந்த பணியாளா்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை ரத்து செய்து அவா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com