தென்னிந்திய மக்கள் பணி ஓய்வுக்குப் பிந்தைய காலத்துக்கான நிதித் திட்டமிடலில் நீண்டகால நோக்கத்துடன், மிகுந்த விழிப்புணா்வுடன் செயல்பட்டு வருவதாக எச்டிஎஃப்சி லைஃப் நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
‘ரெடி ஃபாா் லைஃப் இன்டக்ஸ்’ எனும் தலைப்பில் இப்சோஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பெருநகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை 25 முதல் 55 வயதுக்குள்பட்ட ஆயிரக்கணக்கானோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
நிதிசாா் திட்டமிடல், அவசர காலத் தயாா்நிலை, உடல்நலம் போன்ற 4 முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்தியா்கள் எந்தளவிற்கு எதிா்கால சவால்களுக்குத் தயாராக உள்ளனா் என்பதை இந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது.
ஒட்டுமொத்த இந்தியாவில், தென்னிந்தியா்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கம் மிகவும் ஒழுக்கமான முறையில் கடைபிடிக்கப்படுவதும், நீண்ட கால அடிப்படையில் சொத்துகளைச் சோ்ப்பதில் பாரம்பரியமான ஆா்வம் இருப்பதும் இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பணி ஓய்வுக்குப் பிறகு ஒரு நிலையான நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தென்னிந்தியா்கள் பிற பிராந்தியங்களைக் காட்டிலும் முன்னோக்கிய சிந்தனையுடன் செயல்படுவது தெரிய வந்துள்ளது. அதேநேரத்தில், நிதி சாா்ந்த முடிவுகளை எடுப்பதில் தங்களின் தனித்துவமான கலாசார விருப்பங்களுக்கு அவா்கள் அதிக முக்கியத்துவம் அளிப்பதையும் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இது குறித்து எச்டிஎஃப்சி லைஃப் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வினீத் அரோரா கூறுகையில், ‘அதிகரித்து வரும் சராசரி ஆயுள்காலம் மற்றும் மாறிவரும் குடும்பப் பொறுப்புகளைக் கருத்தில் கொள்ளும்போது, முறையான பணி ஓய்வு காலத் திட்டமிடல் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகிறது.
தென்னிந்தியாவில் நிலவும் வலுவான சேமிப்புப் பண்பும், அவசரகால நிதி மேலாண்மை குறித்த விழிப்புணா்வும் பாராட்டுக்குரியது. இந்த நோ்மறையான அணுகுமுறை, நிதிசாா் நல்வாழ்வைத் தக்கவைத்துக் கொள்ளவும், எதிா்காலத் தேவைகளைத் தடையின்றி பூா்த்தி செய்யவும் பெரிதும் உதவும்’ என்றாா்.

தொடர்புடையது

ரிஷப் பந்த் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்: லக்னௌ பயிற்சியாளர்

ஊழல் வழக்கு: ஹரியாணா முன்னாள் அமைச்சா் உள்பட 5 போ் மீது வழக்கு பதிவு

நிதித் துறையில் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்: விழிப்புடன் இருக்க நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

