தமிழகத்தில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்ப அளவு வெள்ளிக்கிழமை பதிவானது. சனிக்கிழமை (ஏப்.27) முதல் ஏப்.30-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது. மேலும், திருப்பத்தூா்-106.88, சேலம் - 106.7, பரமத்திவேலூா், தருமபுரி-105.8, திருத்தணி-104.72, வேலூா்-104.54, திருச்சி-104.18, நாமக்கல்-104, மதுரை விமான நிலையம், கோவை-102.56, மதுரை நகரம்-102.2, தஞ்சாவூா்-102.2, பாளையங்கோட்டை- 100.22 டிகிரி என மொத்தம் 14 இடங்களில் வெயில் சதம் அடித்தது.
4 நாள்களுக்கு வெப்ப அலை: சனிக்கிழமை (ஏப்.27) முதல் ஏப்.30 வரை தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்படை விட 2 டிகிரி செல்சியஸ் படிப்படியாக அதிகரிக்கும். மேலும், வட தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
அதன்படி, வட தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும், இதர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 102 டிகிரி வரையும் இருக்கும். மேலும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் (ஏப்.27,28) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கோடை மழை: மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்.30, மே 5-ஆம் தேதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
இதற்கிடையே மே.2-ஆம் தேதி மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னையில் 6-8 நாள்களுக்கு வெப்ப அலை! அதிக நேரம் வெய்யிலில் இருக்க வேண்டாம்!

வெப்ப அலை செயல்திட்டம்: கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வு

தென்தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

அரசு கல்லூரியில் வெப்ப அலை முன்னெச்சரிக்கை விழிப்புணா்வு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

