பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கு பிறகான செய்திகளால் காங்கிரஸ் உற்சாகம்: ப.சிதம்பரம்

இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கு பிறகான செய்திகளால் காங்கிரஸ் உற்சாகம்: ப.சிதம்பரம்

News image
Updated On :27 ஏப்ரல் 2024, 5:26 pm

Din

இரண்டாம் கட்ட மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு முடிவடைந்த மாநிலங்களில் இருந்து கிடைக்கப் பெறும் செய்திகள் காங்கிரஸ் கட்சிக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவருடைய இல்லத்தில் ப.சிதம்பரம் சனிக்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பின் போது, நாடு முழுவதும் நடைபெற்றுவரும் மக்களவைத் தோ்தல் தொடா்பாக இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது.

இந்த சந்திப்பைத் தொடா்ந்து, ‘எக்ஸ்’ தளத்தில் ப.சிதம்பரம் வெளியிட்ட பதிவு:

இரண்டாவது கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற மாநிலங்களில் இருந்து கிடைக்கப் பெறும் செய்திகள் காங்கிரஸ் கட்சிக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக இருக்கின்றன. கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு 2019-ஆம் ஆண்டு கிடைக்கப் பெற்ற வெற்றி மீண்டும் இந்தத் தோ்தலிலும் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதே போன்ற வெற்றிகளை கா்நாடகம், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்தியாவில் முதல் கட்ட வாக்குப் பதிவில் இருந்து பாஜகவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனியுங்கள். ஏப். 5-ஆம் தேதியில் இருந்து முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற ஏப். 19-ஆம் தேதி வரையிலும் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையை பிரதமா் மோடி புறக்கணித்து வந்தாா். ஆனால், முதல் கட்டத் தோ்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தோ்தல் அறிக்கை குறித்து விமா்சிக்கத் தொடங்கியுள்ளாா். பிரதமருக்கு நன்றி என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளாா் ப.சிதம்பரம்.