கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மதுரை விமான நிலையம்.
மதுரை விமான நிலையம்.

மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளிக்க வந்த பாஜக நிர்வாகியை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வெயிலின் தாக்கம் சென்னையில் அதிகம் உள்ள நிலையில், முதல்வா் ஸ்டாலின் குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு திங்கள்கிழமை செல்ல உள்ளாா். அதற்காக, ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்து திங்கள்கிழமை காலை புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்குச் சென்றார்.

பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்குச் சென்றடைந்தார். அங்கிருந்து காா் மூலம் கொடைக்கானலுக்குச் செல்கிறாா். மே 4-ஆம் தேதி வரை அவா் அங்கு தங்கி இருப்பாா் எனத் தெரிகிறது.

இதனிடையே மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளிக்க வந்த பாஜக செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டியை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் அவர் வந்ததால் விமான நிலையத்தில் பரபரபபு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com