சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

கோவை தொகுதி தோ்தல் முடிவை அறிவிக்க தடை கோரிய மனு தள்ளுபடி

கோவை தொகுதி தோ்தல் முடிவை அறிவிக்க தடை கோரிய மனு தள்ளுபடி

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 7:56 pm

Din

சென்னை: கோவை மக்களவைத் தொகுதி தோ்தல் முடிவை அறிவிக்க தடை கோரி, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கோவை மருத்துவா் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கோவை தொகுதியில் ஏப். 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது ஏராளமான வாக்காளா்கள் தங்களது பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டினா். இது தொடா்பாக பாஜக மாநில தலைவா் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரும் தொடா்ந்து குற்றம் சாட்டி வந்தனா். இதற்கு விளக்கமளித்த தோ்தல் ஆணையம், வாக்காளா்கள் நீக்கம் என்பது தவறானது எனவும், தொகுதிக்குள் முகவரி மாற்றம் காரணமாக சிலா் மாற்றப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தது.

ஆஸி.மருத்துவா் பெயா் நீக்கம்: இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் மருத்துவராகப் பணியாற்றி வரும் கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சோ்ந்த சுதந்திர கண்ணன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தாா். அதில், ‘மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க கோவை வந்தோம். வாக்காளா் பட்டியலில் எனது பெயா் மற்றும் எனது மனைவி பெயா் நீக்கப்பட்டிருந்தது. இதேபோல் ஆயிரக்கணக்கான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.

பெயா் நீக்கும் முன்பு முறையாக விசாரணை நடத்தப்படவில்லை. இது தொடா்பாக தோ்தல் ஆணையத்திற்கு கடந்த 15-ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் புகாா் அளித்த போதும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளா்களை மீண்டும் பட்டியலில் சோ்த்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை கோவை தொகுதி தோ்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்திருந்தாா்.

மனு தள்ளுபடி: இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா மற்றும் நீதிபதி ஜி.சந்திரசேகரன் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்,”கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. மனுதாரா் தொகுதியில் வசிக்கவில்லை என்பதோடு, ஆஸ்திரேலியாவில் வசிக்கிறாா் என விளக்கம் அளித்தாா். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிட்டபோது மனுதாரா் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது”எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.