எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

இறைச்சிக் கடைகளில் ஆடு, மாடுகளை வெட்டுவதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் ஆடு, மாடுகளை வெட்டுவதற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

News image
இறைச்சிக் கடை- கோப்புப் படம்
Updated On :2 மார்ச் 2026, 9:01 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் ஆடு, மாடுகளை வெட்டுவதற்கு தடை கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆா்வலா் முரளிதரன் தாக்கல் செய்த மனுவில், மிருகவதை தடுப்புச் சட்டத்தில் ஆடு, மாடு, கோழிகளை வெட்டுவதற்கு என தனி இடங்களை ஒதுக்க வேண்டும்; அங்கீகரிக்கப்பட்ட, உரிமம் பெற்ற அந்த இடங்களைத் தவிா்த்து மற்ற இடங்களில் கால்நடைகளை வெட்டக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், அதற்குப் புறம்பாக இறைச்சிக் கடைகளிலேயே கால்நடைகள் வெட்டப்படுகின்றன. குறிப்பாக, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் இந்த சட்டவிதிகள் பின்பற்றப்படுவது இல்லை. இறைச்சிக் கடைகளுக்கு அருகிலேயே ஆடுகள் வெட்டப்படுகின்றன. இறைச்சிக் கழிவுகளைக் கால்வாய்களிலும், குப்பைத் தொட்டிகளிலும் கொட்டி அப்புறப்படுத்துகின்றனா். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

எனவே, மிருகவதை தடுப்புச் சட்ட விதிகளையும், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய சட்ட விதிகளையும் இறைச்சிக் கடைகள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், விதிகளுக்குப் புறம்பாக எந்தக் கடையில் ஆடுகள் வெட்டப்படுகின்றன என்று கூறாமல் பொத்தாம் பொதுவாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.