வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

இன்றும், நாளையும் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

சென்னை: தமிழகத்துக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை மே 4-ஆம் தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

தமிழக வட மாவட்டங்களில் இன்று(ஏப்.30) முதல் மே 3 வரை 4 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கும் என்று ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

நேற்று மட்டும் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!
சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் மே 2 முதல் மே 4 வரை வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்றும், நாளையும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com