சென்னைவாசிகள் கவனத்திற்கு: கனமழை கொட்டித் தீர்க்கும்! தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
சென்னையில் கனமழை கொட்டித் தீர்க்கும் -தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான்


சென்னையில் பரவலாக கனமழை கொட்டித் தீர்க்கும் என்று தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை மட்டுமன்றி அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் அடுத்த 10 நாள்களுக்கு தீவிர மழைக்கு வாய்ப்பிருப்பதாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வெப்பச்சலனத்தால் தமிழக உள் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் அடுத்த இரு வாரங்களுக்கு மழை பெய்யக்கூடும். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பகல் வேளையில் வெயில் வாட்டினாலும், மாலை வேளையில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று(ஆக. 4) பகல் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் மதுரவாயல், போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், ஐயப்பந்தாங்கல், வானகரம் உள்பட மாநகரின் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...