மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக.6) 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
Updated On :5 ஆகஸ்ட் 2024, 9:10 pm

Din

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக.6) 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக கடலோர பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, செவ்வாய்க்கிழமை (ஆக.6) முதல் ஆக.11-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்

இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக, செவ்வாய்க்கிழமை (ஆக.6) ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா் ஆகிய 6 மாவட்டங்களிலும், புதுச்சேரி பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மழை அளவு (மில்லி மீட்டரில்): தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக கடலூா் மாவட்டம் வடக்குத்தில் 130 மி.மீ. மழை பதிவானது. நெய்வேலி (கடலூா்) -120, இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்), வல்லம் (விழுப்புரம்) தலா 100.

சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூா், திருவண்ணாமலை, அரியலூா், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், ராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் குறிப்பிட்ட அளவு மழை பதிவாகியுள்ளது.

நீா்வரத்து அதிகரிப்பு: நீா் ஆதாரப் பகுதிகளில் பெய்த கன மழையால் சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 100 கன அடியாக இருந்த நீா்வரத்து திங்கள்கிழமை 577 கன அடியாக அதிகரித்தது. புழல் ஏரிக்கு நீா்வரத்து வினாடிக்கு 100 கன அடியாக அதிகரித்துள்ளது.