ஆக. 9ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு.


சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுக அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். மாளிகையில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் அதிமுகவின் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...