ஆவடியில் வீட்டில் குளிர்பதனப் பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து 5 வயது சிறுமி உயிரிழந்தார்.
ஆவடி அருகே நந்தவன மேட்டூர், நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் கெüதம். இவரது மனைவி பிரியா. இத்தம்பதி மகள் ரூபாவதி (5) (படம்). இவர் ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை ரூபாவதி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். தாய் பிரியா வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார். ரூபாவதி சமையலறைக்குச் சென்று அங்கிருந்த குளிர்பதனப் பெட்டியை (பிரிட்ஜ்) திறந்தபோது, எதிர்பாராத விதமாக அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து ரூபாவதி தூக்கி வீசப்பட்டார்.
இதையடுத்து தாய் பிரியா, மகளை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆவடி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவல் அறிந்து ஆவடி போலீஸார் சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து சிறுமி பலி

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



