
தேசிய கொடி ஏற்றுவதை தடுத்தால் குண்டர் சட்டத்தில் கைது வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி வியாழக்கிழமை தேசிய கொடி ஏற்றும் நிகழ்வை தடுக்க முன்னாள் நிர்வாகிகள் திட்டமிட்டிருப்பதாகவும், போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.
அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் திங்கள்கிழமை காலை விசாரணைக்கு எடுத்தார்.
இந்த விசாரணையின் போது பேசிய நீதிபதி, “தேசிய கொடி ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது. தேசிய கொடி ஏற்றுவதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவது அவமானம்” எனத் தெரிவித்தார்.
மேலும், தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, போலீஸ் நடவடிக்கை எடுக்க தவறினால் நீதிமன்றத்தை நாடலாம் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.