எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பாஜக பேரணிக்கு அனுமதி மறுப்பு: நீதிமன்றத்தில் முறையீடு

தமிழகத்தில் சுதந்திர தினத்தன்று பைக் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக முறையீடு.

News image
சென்னை உயர்நீதிமன்றம்- DIN
Updated On :13 ஆகஸ்ட் 2024, 6:21 am

DIN

தமிழகத்தில் இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக முறையீடு செய்துள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் வருகிற ஆக. 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று மாவட்டத் தலைநகரங்களில் இருசக்கர வாகனப் பேரணி நடத்தப்படும் என தமிழக பாஜக அறிவித்திருந்தது.

ஆனால், பைக் பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக முறையீடு செய்துள்ளது.

பாஜகவின் முறையீட்டை ஏற்று, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் பிற்பகல் 2.15 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.