தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

நிதி நிறுவன மோசடி: தேவநாதன் யாதவ் கைது

ரூ. 525 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை.

Dinamani

டி. தேவநாதன் யாதவ் - Din

Updated On :

மயிலாப்பூர் இந்து நிதி நிறுவன மோசடி வழக்கில் மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் டி. தேவநாதன் யாதவ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்து நிதி நிறுவனம் ரூ. 525 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் 140-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர்.

தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் மீது புகார்கள் வந்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

முதற்கட்டமாக தேவநாதனை கைது செய்து விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்ட நிலையில், அவர் தலைமறைவானார். அவரின் செல்போன் டவர் மூலம் திருச்சி அருகே இருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, திருச்சி விரைந்த பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தேவநாதனை கைது செய்து சென்னை அழைத்து வரவுள்ளனர்.

சென்னையில் விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக வேட்பாளராக சிவகங்கையில் வேதநாதன் யாதவ் போட்டியிட்டிருந்தார்.

தேர்தலில் போட்டியிட தேவநாதன் யாதவ் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.305 கோடி எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.