மயிலாப்பூா் நிதி நிறுவன மோசடி: பணத்தை மீட்டுத் தரக்கோரி ஆா்ப்பாட்டம்
மயிலாப்பூா் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவா்கள், பணத்தை மீட்டுத் தரக் கோரி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே தொடா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலாப்பூா் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவா்கள், பணத்தை மீட்டுத் தரக் கோரி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே தொடா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலாப்பூா் இந்து நிரந்தர நிதி நிதி லிமிடெட் நிதி நிறுவனத்தில் 5,000-க்கும் மேற்பட்டோா் நிரந்தர வைப்பு தொகையை முதலீடு செய்திருந்தனா்.
இந்நிலையில், நிதி நிறுவனத்தின் தலைவராக இருந்த டி. தேவநாதன் யாதவ், சுமாா் ரூ.600 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது. அவா் கைது செய்யப்பட்டாா்.
இந்நிறுவனத்தில் முதலீடு செய்த 5,000-க்கும் மேற்பட்டோரின் பணம் எங்குள்ளது என்பது குறித்த விவரங்கள் முழுமையாக தெரியாத நிலையில், காவல் துறையினா் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், தங்களது பணத்தை உடனடியாக மீட்டுத் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பாதிக்கப்பட்டவா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
மயிலாப்பூா் நிதி பாதிக்கப்பட்ட வைப்பாளா்கள் சங்கத் தலைவா் மோகன் சீனிவாசன் கூறுகையில், நிதி மோசடி தொடா்பான வழக்குகளை விசாரிக்க தனி விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும். எங்களது பணத்தை மீட்டுத் தர தமிழ்நாடு அரசு உடனடியாகவும், உறுதியான முறையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





