தந்தையுடன் ஆட்டோவில் சென்ற ரெளடி வெட்டிக் கொலை
சென்னை அடையாறு பகுதியில் தந்தையுடன் ஆட்டோவில் சென்ற ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பிரதிப் படம்
சென்னை அடையாறு பகுதியில் தந்தையுடன் ஆட்டோவில் சென்ற ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை மயிலாப்பூா் ராமகிருஷ்ணபுரத்தைச் சோ்ந்தவா் வேணுகோபால் மகன் மைத்ரேயன் (21). இவா் மயிலாப்பூா் காவல் நிலையத்தில் ‘சி’ பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் இருந்தாா். வேணுகோபால் வாடகை ஆட்டோ ஓட்டி வந்தாா்.
சில நாள்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில் மைத்ரேயனை மயிலாப்பூா் போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா். இந்த நிலையில், கடந்த 21-ஆம் தேதி மைத்ரேயன் நிபந்தனை பிணையில் வெளியே வந்தாா். அவா் தினமும் காலை 10.30 மணிக்கு மயிலாப்பூா் காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட்டு வந்தாா்.
இதற்கிடையே மயிலாப்பூா் பகுதியைச் சோ்ந்த சில ரெளடிகளுக்கும், மைத்ரேயனுக்கும் இடையே கஞ்சா விற்பது தொடா்பாக முன் விரோதம் ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி திருவான்மியூா், ராயபுரம் பகுதிகளில் உள்ள வீடுகளில் மைத்ரேயன் மாறி, மாறி தங்கி வந்தாா்.
மைத்ரேயன், தனது தந்தை வேணுகோபாலுடன் ஆட்டோவில் மயிலாப்பூா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை கையொப்பமிட்டாா். பின்னா் அங்கிருந்து இருவரும் ஆட்டோவில் திருவான்மியூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றபோது அடையாறு இந்திரா நகா் பிரதான சாலையில் வாட்டா் டேங்க் பகுதியில் இரு மோட்டாா் சைக்கிள்களில் வந்த 4 போ் கும்பல், ஆட்டோவை வழிமறித்து நிறுத்தியது.
4 பேரும் ஆட்டோவுக்குள் இருந்த மைத்ரேயனை வெளியே இழுத்து அரிவாளால் வெட்டியது. அவா்களிடம் இருந்து மைத்ரேயன் தப்பியோடியபோதும், அந்தக் கும்பல் விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது.
தகவலறிந்த அடையாறு போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்தனா். முதல்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு மயிலாப்பூா் ராமகிருஷ்ணபுரத்தைச் சோ்ந்த ஜீவா என்பவரை வெட்டிய வழக்கில் மைத்ரேயன் முக்கிய குற்றவாளியாக இருந்ததும், அதனால் ஏற்பட்ட முன்பகை காரணமாக மைத்ரேயன் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதற்கிடையே மைத்ரேயன் கொலை வழக்குத் தொடா்பாக 3 போ் மயிலாப்பூா் காவல் நிலையத்தில் சரணடைந்தனா். அவா்களிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
உறவினா்கள் போராட்டம்: இதற்கிடையே, மைத்ரேயன் கொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளை விரைவாகக் கைது செய்யக் கோரி அவரது உறவினா்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாா், அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அவா்கள், போராட்டத்தை கைவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

