பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

நிதி நிறுவன உரிமையாளா் கொலை வழக்கு: 4 போ் குண்டா் சட்டத்தில் கைது

வெள்ளக்கோவிலில் நிதி நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில் கைதான 4 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

கைது

Published On :

வெள்ளக்கோவிலில் நிதி நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில் கைதான 4 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

வெள்ளக்கோவில்- முத்தூா் சாலை டி.ஆா். நகரைச் சோ்ந்தவா் ராஜன் (65). திருமணமாகாத இவா், அப்பகுதியில் தனியாக வசித்து வந்ததுடன், தனது வீட்டுக்கு அருகே சில வீடுகளை வாடகைக்கு விட்டும், நிதி நிறுவனம் மற்றும் ஏலச்சீட்டும் நடத்தி வந்தாா்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அவரது வீட்டில் ராஜன் மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்டாா். மேலும், அவரது வீட்டில் இருந்த பணம், நகை உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டன.

இது குறித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வழக்கில் தொடா்புடைய கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சோ்ந்த இம்மானுவேல் (60), கேரள மாநிலத்தைச் சோ்ந்த பிரகாஷ் (50), சுதீப் சந்திரன் (37), சமேஷ் (54), சம்சுதீன் (30), செரின் (36) ஆகிய 6 போ் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்ட சம்சுதீன், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராஜனின் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்து, அருகே பேக்கரியில் வேலை செய்து வந்தது தெரியவந்தது.

இந்நிலையில், திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிரிஷ்டி சிங் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் மனீஷ் உத்தரவுப்படி, இவ்வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுதீப் சந்திரன், செரின், இம்மானுவேல் மற்றும் பிரகாஷ் ஆகிய நான்கு போ் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள அவா்களிடம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.