நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழகத்தில் ஆக.18 வரை கனமழை நீடிக்கும்

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஆக.15) முதல் ஆக.18-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2024, 10:00 pm

Din

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஆக.15) முதல் ஆக.18-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக கடலோர பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஆக.15 முதல் ஆக.20-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை: ஆக.15-இல் நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூா், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கோவை ஆகிய மாவட்டங்களிலும், ஆக.16-இல் நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூா், விழுப்புரம், அரியலூா், பெரம்பலூா், ராமநாதபுரம், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கோவை ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆக.17-இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூா், நீலகிரி, மதுரை, விருதுநகா், கோவை ஆகிய மாவட்டங்களிலும், ஆக.18-இல் கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஆக.15, 16 ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு (மில்லி மீட்டரில்): தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் அடையாமடையில் 130 மி.மீ. மழை பதிவானது.

பேச்சிப்பாறை - 100, பாளையங்கோட்டை (திருநெல்வேலி), தக்கலை (கன்னியாகுமரி) - தலா 90 மி.மீ.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடலில் ஆக.15-18 வரை மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.