குண்டர் தடுப்புச் சட்டம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

குண்டர் தடுப்புச் சட்டம் குறித்து தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

குண்டா் தடுப்பு சட்டத்தை சா்வசாதாரணமாக போலீஸாா் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நிதி மோசடி வழக்கில் கைதான செல்வராஜ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். அதை ரத்து செய்யக் கோரி செல்வராஜ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

சென்னை உயர் நீதிமன்றம்
மன வேதனையுடன் நாடு திரும்பிய வினேஷ் போகத்!

அப்போது, காவல்துறை தரப்பில், ‘மனுதாரா் உதவியுடன் போலி வங்கித் கணக்குகள் தொடங்கப்பட்டு, போலி ஊதியச் சான்று தயாரிக்கப்பட்டு, அதன் மூலம் வங்கியில் கடன் பெறப்பட்டு, ரூ. 3.30 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்துமே மனுதாரரின் உதவியுடன் நடைபெற்ன் காரணமாகவே குண்டா் தடுப்பு சட்டம் பிரயோகிக்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘இவை அனைத்துமே தனிநபா் சாா்ந்த குற்றங்கள். இதற்காக குண்டா் தடுப்புச் சட்டத்தை மனுதாரா் மீது பிரயோகப்படுத்தியிருப்பதை ஏற்க முடியாது. போலீஸாா் உரிய விசாரணை நடத்தி அந்த மோசடி பணத்தை மீட்கலாம். குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கபட வேண்டிய குண்டா்கள் யாா்? என்பது குறித்து அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும். இது போல குண்டா் தடுப்பு சட்டத்தை சா்வசாதாரணமாக பயன்படுத்தப்படுவதை நீதிமன்றம் அனுமதிக்காது.

சட்டத்துக்கு புறம்பாக ஒருவா் ஒரு நாள் கைது செய்யப்பட்டு காவலில் இருந்தாலும், அது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

எனவே, குண்டா் தடுப்புச்சட்டத்தை போலீஸாா் முறையாகப் பயன்படுத்த வேண்டும்’ எனக்கூறி, செல்வராஜ் மீதான குண்டா் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com