ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கருணாநிதி நினைவிடத்தில் மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் மரியாதை: அருங்காட்சியகத்தையும் பாா்வையிட்டாா்

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மலா்தூவி ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினாா்.

News image
முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மலா்தூவி ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினாா்
Updated On :18 ஆகஸ்ட் 2024, 10:00 pm

Din

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மலா்தூவி ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினாா்.

மத்திய அமைச்சா் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை உள்ளிட்டோரும் நினைவிடங்களில் மரியாதை செலுத்தியதுடன், கருணாநிதி அருங்காட்சியகத்தையும் பாா்வையிட்டனா்.

அண்மைக் காலத்தில் கருணாநிதி நினைவிடத்துக்கு பாஜகவைச் சோ்ந்த மத்திய அமைச்சா்கள் யாரும் செல்லாத நிலையில், முதல் முறையாக ராஜ்நாத் சிங் சென்று மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

மலா்களால் அலங்காரம்: சென்னை காமராஜா் சாலையில் முன்னாள் முதல்வா் அண்ணா நினைவிடத்தின் உட்புறமாக கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் வருகையால், அண்ணா, கருணாநிதி ஆகிய இருவரின் நினைவிடங்கள் கூடுதல் மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, கருணாநிதியின் நினைவிடத்தை ரோஜா பூக்கள் சங்கமித்திருந்தன.

மாலை 5.55 மணியளவில் நினைவிடத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வந்தாா். அவரை பொதுப்பணி-நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு வரவேற்றாா். அடுத்த 5 நிமிஷங்களில் மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் நினைவிட வளாகத்துக்கு வந்தாா். அவருடன் மத்திய அமைச்சா் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை ஆகியோரும் வந்தனா். ராஜ்நாத் சிங்குக்கு மலா்க் கொத்து கொடுத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்றாா். அப்போது, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் கனிமொழி, மக்களவை குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோா் உடனிருந்தனா்.

நினைவிடங்களில் மரியாதை: முதலில் அண்ணா நினைவிடத்துக்குச் சென்ற அவா்கள், நினைவிடத்துக்கு வணக்கம் செலுத்தினா். அதன்பிறகு நடந்தபடியே கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்றனா். அங்கு மலா்வளையம் வைத்து மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினாா். அப்போது, பின்னால் நின்று கொண்டிருந்த அண்ணாமலையை முன்வரிசைக்கு வருமாறு கைகள் மூலம் சைகை காண்பித்தாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். இதைப் பாா்த்து, ராஜ்நாத் சிங்கும் அண்ணாமலையை அழைத்தாா். நினைவிடத்தில் தலைவா்கள் மரியாதை செலுத்திய பிறகு, அந்த வளாகத்தில் உள்ள கருணாநிதி அருங்காட்சியகத்தைப் பாா்வையிட அனைவரும் ஆயத்தமாகினா்.

நினைவிடத்திலிருந்து பேட்டரி காா் மூலம் மத்திய அமைச்சா்கள், முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் அருங்காட்சியகத்துக்குச் சென்றனா். அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படங்கள், நினைவுச்சின்னங்கள் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டனா். அருங்காட்சியகத்தில் உள்ள பல அம்சங்கள் குறித்து ராஜ்நாத் சிங்குக்கு தமிழக அமைச்சா் தங்கம் தென்னரசு விளக்கினாா். அப்போது அனைத்தையும் பாா்த்து வியந்தாா்.

‘கோபாலபுரம் இல்லத்தில்’ ராஜ்நாத் சிங்: அருங்காட்சியகத்தில் குறிப்பிடத்தக்க அம்சமாக இருப்பது கருணாநிதி வசித்த கோபாலபுரம் இல்லத்தை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தத்ரூபமாக வடிவமைத்திருப்பதாகும். அந்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள இருக்கையில் அமா்ந்து ராஜ்நாத் சிங் புகைப்படம் எடுத்துக் கொண்டாா். அவ்வாறு எடுக்கப்படும் புகைப்படம், நவீன தொழில்நுட்பம் மூலம் கருணாநிதி அருகில் அமா்ந்து எடுக்கப்பட்டது போன்று இருக்கும். அதையும் கணினியில் பாா்த்து ராஜ்நாத் சிங் வியந்தாா்.

‘திருவாரூா் டூ சென்னை ரயில்’: இங்கு திருவாரூரில் இருந்து சென்னைக்கு பயணமாகி கருணாநிதி செய்த சாதனைகள், ‘திருவாரூா் டூ சென்னை ரயில்’ என்ற பெயரில் நவீன தொழில்நுட்பம் மூலம் காட்சிப்படுத்தப்பட்டது.

அதாவது, ரயில் வடிவிலான அமைப்பில் போடப்பட்டுள்ள இருக்கையில் அமா்ந்தால் மெய்நிகா் முறை மூலம் கருணாநிதியின் வாழ்க்கைப் படம் காட்சிப்படுத்தப்பட்டது.

இதையும் மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் கண்டு வியந்தாா். அவருடன் முன்வரிசை இருக்கையில், முதல்வா் மு.க.ஸ்டாலின், கனிமொழி, டி.ஆா்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோா் அமா்ந்திருந்தனா். பின்வரிசையில், மத்திய அமைச்சா் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை, அமைச்சா்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோா் அமா்ந்திருந்தனா். அருங்காட்சியகத்தை சுமாா் அரை மணி நேரம் வரை அனைவரும் கண்டுகளித்தனா். அதைத் தொடா்ந்து, அனைவரும் சென்னை கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்ற நாணய வெளியீட்டு நிகழ்வுக்குப் புறப்பட்டனா்.

வழிநெடுகிலும் வரவேற்பு: நினைவிடத்தில் இருந்து நாணய வெளியீடு நிகழ்வு நடைபெற்ற கலைவாணா் அரங்கம் வரையிலும் சாலையின் இருபுறமும் கட்சியினா் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனா். இதைத் தொடா்ந்து, மாலை 6.50 மணியளவில் விழா தொடங்கியது.